திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறிய திருமடல் |
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும். |
தனியன் |
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச் செய்தது |
நேரிசை வெண்பா
|
முள்ளிச் செழுமலரோ தாரான் முளைமதியம்,
கொள்ளிக்கென் உள்ளம் கொதியாமே,-வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி,
மருவாளன் தந்தான் மடல்.
|
சிறிய திருமடல் |
கலிவெண்பா |
2673-2712
காரார் வரைக்கொங்கை கண்ணார் கடலுடுக்கை,
சீரார் சுடர்ச்சுட்டிச் செங்கலுழிப் பேராற்று,
|
1 |
பேரார மார்வின் பெருமா மழைக்கூந்தல்,
நீரார வேலி நிலமங்கை யென்னும்,இப்
|
2 |
பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே-அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொருள் இன்பமென்று,
|
3 |
ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்,
சீரார் இருகலையும் எய்துவர்-சிக்கெனமற்று
|
4 |
ஆரானு முண்டென்பார் என்பது தானதுவும்,
ஓராமை யன்றே உலகத்தார் சொல்லுஞ்சொல்,
|
5 |
ஓராமை யாமா றதுவுரைக்கேன் கேளாமே,
காரார் புரவியேழ் பூண்ட தனியாழி,
|
6 |
தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு,
ஆரா அமுதமங் கெய்தி-அதினின்றும்
|
7 |
வாரா தொழிவதொன் றுண்டே? அதுநிற்க,
ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே?
|
8 |
ஏரார் இளமுலையீர்* என்றனக் குற்றதுதான்,
காரார் குழலெடுத்துக் கட்டி-கதிர்முலையை
|
9 |
வாரார வீக்கி மணிமே கலைதிருத்தி,
ஆரா ரயில்வேற்கண் அஞ்சனத்தின் நீறணிந்து,
|
10 |
சீரார் செழும்பந்து கொண்டடியா நின்றேன்நான்,
நீரார் கமலம்போல் செங்கண்மா லென்றொருவன்,
|
11 |
பாரோர்க ளெல்லாம் மகிழப் பறைகறங்க,
சீரார் குடமிரண் டேந்தி-செழுந்தெருவே
|
12 |
ஆரா ரெனச்சொல்லி ஆடும் அதுகண்டு,
ஏரார் இளமுலையார் என்னயைரு மெல்லாரும்,
|
13 |
'வாராயோ?' என்றார்க்குச் சென்றெனென் வல்வினையால்
காரார் மணிநிறமும் கைவளையும் காணேன்நான்.
|
14 |
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன்-அறிவழிந்து
தீரா வுடம்பொடு பேதுறுவேன் கண்டிரங்கி,
|
15 |
ஏரார் கிளிக்கிளவி எம்மனைதான் வந்தென்னை,
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு-செங்குறிஞ்சித்
|
16 |
தாரார் நறுமாலைச் சாத்தற்கு, தான்பின்னும்
நேரா தனவொன்று நேர்ந்தாய்-அதனாலும்
|
17 |
தீராதென் சிந்தைநோய் தீராதென் பேதுறவு,
வாராது மாமை அதுகண்டு மற்றாங்கே,
|
18 |
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்,
'பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல்,
|
19 |
ஆரானும் மெய்ப்படுவன்' என்றார்-அதுகேட்டுக்
காரார் குழல்கொண்ட கட்டுவிச்சி கட்டேறி,
|
20 |
சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா,
வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவா,
|
21 |
'பேரா யிரமுடையான்' என்றாள்-பெயர்த்தேயும்
காரார் திருமேனி காட்டினாள், 'கையதுவும்
|
22 |
சீரார் வலம்புரியே' என்றாள்-திருத்துழாய்த்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா,
|
23 |
நீரேது மஞ்சேல்மின்* நும்மகளை நோய்செய்தான்,
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனைநான்,
|
24 |
கூரார்வேற் கண்ணீர் உமக்கறியக் கூறுகெனோ?,
ஆராலிவ் வையம் அடியளப் புண்டதுதான்?,
|
25 |
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது?,மற்று
ஆராலே கன்மாரி காத்ததுதான்?-ஆழிநீர்
|
26 |
ஆரால் கடைந்திடப் பட்டது? அவன்காண்மின்
ஊரா நிரைமேய்த் துலகெல்லாம் உண்டுமிழ்ந்தும்,
|
27 |
ஆராத தன்மையனாய் ஆங்கொருநாள் ஆய்ப்பாடி,
சீரார் கலையல்குல் சீரடிச் செந்துவர்வாய்,
|
28 |
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக்கொண்டு,
ஏரார் இடைநோவ எத்தனையோர் போதுமாய்,
|
29 |
சீரார் தயிர்சடைந்து வெண்ணெய் திரண்டதனை,
வேரார் நுதல்மடவாள் வேறோர் கலத்திட்டு,
|
30 |
நாரார் உறியேற்றி நன்கமைய வைத்ததனை,
பேரார்வேற் கண்மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்,
|
31 |
ஓரா தவன்போல் உறங்கி அறிவுற்று,
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி,
|
32 |
ஆராத வெண்ணெய் விழுங்கி-அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே,
|
33 |
ஓரா தவன்போல் கிடந்தானைக் கண்டவளும்,
வாராத்தான் வைத்தது காணாள்' வயிறடித்திங்கு
|
34 |
'ஆரார் புகுதுவார் ஐயர் இவரல்லால்?,
நீரா மிதுசெய்தீர்' என்றோர் நெடுங்கயிற்றால்,
|
35 |
ஊரார்க ளெல்லாரும் காண வுரலோடே,
தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப,
|
36 |
ஆரா வயிற்றினோ டாற்றாதான்-அன்றியும்
நீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி,
|
37 |
ஓரா யிரம்பணவெங் கோவியல் நாகத்தை,
'வாரா யெனக்ஙெகன்று மற்றதன் மத்தகத்து,
|
38 |
சீரார் திருவடியால் பாய்ந்தான்-தன் 'சீதைக்கு
நேராவன்' என்றோர் நிசாசரிதான் வந்தாளை,
|
39 |
கூரார்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்,
ஈரா விடுத்தவட்கு மூத்தோனை, வெந்நரகம்
|
40 |
சேரா வகையே சிலைகுனித்தான், செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா,
|
41 |
ஏரார் தடந்தோள் இராவணனை-ஈரைந்து
சீரார் சிரமறுத்துச் செற்றுகந்த செங்கண்மால்,
|
42 |
போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை,
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு-குடல்மாலை
|
43 |
சீரார் திருமார்பின் மேல்கட்டி, செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள்கொட்டி,
|
44 |
ஆரா எழுந்தான் அரியுருவாய்-அன்றியும்
பேர்வா மனனாய காலத்து, 'மூவடிமண்
|
45 |
தாராய் எனக்ஙெகன்று வேண்டிச் சலத்தினால்,
நீரேற் றுலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை-
|
46 |
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்,
காரார் வரைநட்டு நாகம் கயிறாக,
|
47 |
பேராமல் தாங்கிக் கடைந்தான்-திருத்துழாய்த்
தாரார்ந்த மார்வன் தடமால் வரைபோலும்,
|
48 |
போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி,
நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடுங்கையால்,
|
49 |
'நாராண ணா*ஓ மணிவண்ணா* நாகணையாய்,
வாராய்என் ஆரிடரை நீக்காய்',-எனவெகுண்டு
|
50 |
தீராத சீற்றத்தால் சென்றிரண்டு கூறாக,
ஈ.ரா அதனை இடர்கடிந்தான் எம்பெருமான்,
|
51 |
பேரா யிரமுடையான் பேய்ப்பெண்டீர்* நும்மகளை,
தீராநோய் செய்தான்' எனவுரைத்தாள்-சிக்கெனமற்று
|
52 |
ஆரானும் அல்லாமை கேட்டெங்கள் அம்மனையும்,
'போரார்வேற் கண்ணீர்* அவனாகில் பூந்துழாய்,
|
53 |
தாரா தொழியுமே? தன்னடிச்சி யல்லளே?, மற்று
ஆரானும் அல்லனே' என்றொழிந்தாள்-நானவனைக்
|
54 |
காரார் திருமேனி கண்டதுவே காரணமா,
பேராப் பிதற்றாத் திரிதருவன்,-பின்னையும்
|
55 |
ஈ.ராப் புகுதலும் இவ்வுடலைத் தண்வாடை,
சோரா மறுக்கும் வகையறியேன்-சூழ்குழலார்
|
56 |
ஆரானும் ஏசுவர் என்னும் அதன்பழியை,
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்,
|
57 |
'வாராய் மடநெஞ்சே* வந்து-மணிவண்ணன்
சீரார் திருத்துழாய் மாலை நமக்கருளி,
|
58 |
தாரான் தருமென் றிரண்டத்தி லொன்றதனை,
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்,
|
59 |
ஆராயு மேலும் பணிகேட்ட தன்றெனிலும்,
போரா தொழியாதே போந்திடுநீ' என்றேற்கு,
|
60 |
காரார் கடல்வண்ணன் பின்போன நெஞ்சமும்,
வாராதே என்னை மறந்ததுதான்,-வல்வினையேன்
|
61 |
ஊரார் உகப்பதே யாயினேன்-மற்றெனக்கிங்
காராய்வார் இல்லை அழல்வாய் மெழுகுபோல்,
|
62 |
நீராய் உருகுமென் ஆவி-நெடுங்கண்கள்
ஊரார் உறங்கிலும் தாமுறங்கா, உத்தமன்றன்
|
63 |
பேரா யினவே பிதற்றுவன்-பின்னையும்
காரார் கடல்போலும் காமத்த ராயினார்
|
64 |
ஆரேபொல் லாமை அறிவார்?,-அதுநிற்க,
ஆரானும் ஆதானும் அல்லள் அவள்காணீர்,
|
65 |
வாரார் வனமுலை வாசவ தத்தையென்று,
ஆரானும் சொல்லப் படுவாள், அவளும்தன்
|
66 |
பேராயம் எல்லாம் ஒழியப் பெருந்தெருவே,
தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்,
|
67 |
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?,-மற்றெனக்கிங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நானவனைக்
|
68 |
காரார் திருமேனி காணும் அளவும்போய்,
சீரார் திருவேங் கடமே திருக்கோவல்
|
69 |
ஊரே, மதிள்கச்சி ஊரகமே பேரகமே,
பேரா மருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே,
|
70 |
பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம்-கணமங்கை
|
71 |
காரார் மணிநிறக் கண்ணனு}ர் விண்ணகரம்,
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்,
|
72 |
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை,
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை,
|
73 |
சீராரும் மாலிருஞ் சோலை-திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை,
|
74 |
ஊராய எல்லாம் ஒழியாமே-நானவனை,
ஓரானைக் கொம்பொசித் தோரானை கோள்விடுத்த
|
75 |
சீரானை, செங்க ணெடியானைத் தேன்துழாய்த்
தாரானை, தாமரைபோல் கண்ணானை-எண்ணருஞ்சீர்
|
76 |
பேரா யிரமும் பிதற்றி,-பெருந்தெருவே
ஊரார் இகழிலும் ஊரா தொழியேன்நான்,
|
77 |
வாரார்பூம் பெண்ணை மடல்.
|
77½ |
நேரிசை வெண்பா
|
ஊரா தொழியேன் உலகறிய ஒண்ணுதலீர்*
சீரார் முலைத்தடங்கள் சேரளவும்,-பாரெல்லாம்
அன்றோங்கி நின்றளந்தான் நின்ற திருநறையூர்
மன்றோங்க வூர்வன் மடல்.(*)
(*)இது கம்பர் பாடிய பாடல் என்பர்.
|
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் |